Friday 3rd of May 2024 06:25:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை: தனுஷ்கோடி கடலேரப் பகுதிகளில் பரபரப்பு! (காணொளி)

கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை: தனுஷ்கோடி கடலேரப் பகுதிகளில் பரபரப்பு! (காணொளி)


தமிழ்நாடு தனுஷ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்று கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை குறித்து தமிழ்நாட்டு கடலோர காவல்குழும போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே இராட்சத ரப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழ்நாட்டு கடலோரா காவல் குழும போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்க்குச் சென்ற மெரைன் போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட உருளையை கரைக்கு கொண்டு வர முயறச்சித்தனர் காற்றின்வேகம் அதிகரித்ததால் அதனை ஒத்தப்பட்டி கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். சுமார் 15 உயரமும் 6 அடி விட்டமும் கொன்ட இராட்சத ரப்பர் உருளை சுமார் 3 டன் எடை கொன்டதாக இருக்கும் என இராமேஸ்வரம் தமிழ்நாட்டு கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்தார்.

கரை ஒதுங்கிய பைபர் உருளை ஆழ்கடலில் செல்லும் கப்பல்களில் மிதவையாகவோ அல்லது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையாமல் தடுக்கும் உருளையாகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இந்த வகையாக ரப்பர் உருளை தூத்துக்குடி துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லை என்பதால் இலங்கை துறைமுகத்திற்க்கு வந்த கப்பல்களில் இருந்து தவறி விழுந்து தனுஸ்கோடி கடற்பகுதிக்குள் வந்திருக்கலாம் என்ற கோனத்திலும் மெரைன் போலீசாருடன் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராட்சத ரப்பர் உருளை சிக்கியது தனுஸ்கோடி கடலோர கிராமங்களில் கடலோரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE